2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சிறுத்தைக் குட்டி மரணம்

Sudharshini   / 2016 மே 11 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ்

அக்கரப்பத்தனை,  டெல் தோட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) காலை மீட்கப்பட்டு,  வன விலங்கு ஜுவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுத்தைக் குட்டி திணைக்களத்துக்கு கொண்டுச் செல்லும் வழியில் மரணித்துள்ளதென  அதிகாரிகள் தெரிவித்தனர்.

தோட்டத் தொழிளாலர்களும் அக்கரப்பத்தனை பொலிஸாரும் இணைந்து இச்சிறுத்தைக் குட்டியை மீட்டு, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டத்தில் பின்னங்கால்கள் காயமடைந்த நிலையில் மானொன்று உயிருடன் மீட்கப்பட்டு நல்லதண்ணி வன விலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .