2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்றவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 04 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பகுமார்

சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (03) அக்கரப்பத்தனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தோட்டமொன்றில் வைத்து குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்தாக, சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த  முறைப்பாட்டுக்கிணங்க சந்தேகநபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர் 54 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .