Kogilavani / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன, ரஞ்சித் ராஜபக்ஷ
வட்டவளை, வெளி ஓயா கீழ் பிரிவு தோட்டத்தில் 9 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரின் குடும்பத்தை தோட்டத்திலிருந்து வெளியேற்றக்கோரி தொழிலாளர்கள் நேற்று(26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 'கடந்த மாதம் 21ஆம் திகதி, மேற்படி சிறுவனை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், இரண்டுமுறை திருமணம் செய்த நபரை(தோட்ட கங்காணி) சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
இவரின் மனைவிமார்களில் ஒருவர் வெளிநாட்டில் பணிப்புரிவதாகவும் மற்றையவர் அவரை கைவிட்டுச் சென்றுவிட்டதாகவும் இவருக்கு ஐந்து பிள்ளைகள் இருப்பதாகவும் அறியமுடிகிறது.
இவருக்கு எதிராக, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மேற்படி நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை(19) ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் டபிள்யூ.எம்.லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது அவர் ரொக்கப் பிணையில்; விடுவிக்கப்பட்டார்.
இதனை கேள்வியுற்ற பிரதேச மக்கள், குறித்த நபரின் பிணையை இரத்து செய்து மீண்டும் அவரைச் சிறையில் வைக்குமாறு கோரி புதன்(20) மற்றும் வியாழக்கிழமைகளில்(21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை, மேற்படி நபரின் மகன் கத்திமுனையில் அச்சுறுத்தியுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இருவரையும் கத்தியுடன் கைதுசெய்ததுடன் எச்சரிக்கை செய்து இருவரையும் விடுவித்தனர்.
பொலிஸிலிருந்து வந்த நபர், தோட்டத்திலுள்ள சிலருக்கு மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துகொள்வதாகவும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, சம்பந்தப்பட்ட குடும்பத்தை தோட்டத்திலிருந்து வெளியேற்றுமாறு கோரியே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என தோட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
56 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
3 hours ago