2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சங்கிலி அறுத்த இருவர் கைது

Sudharshini   / 2015 நவம்பர் 18 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ் கு.புஷ்பராஜ்

அக்கரபத்தனை, வௌர்லி தோட்டத்தில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றதாக கூறப்படும் இருவரை ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மன்றாசி, கல்மதுரை தோட்டத்தைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.வௌர்லி தோட்டத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்து சென்றுள்ள மேற்படி இருவரும் நீண்ட நாட்களாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்துள்ளனர்.

இவர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .