R.Maheshwary / 2022 ஜூலை 14 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
ஹப்புத்தளை- காகொல்ல வை ஜன்சன் பகுதியில் பஸ்ஸுக்காக காத்திருந்த இரண்டு யுவதிகளின் தங்க சங்கிலியை திருடர்கள் இருவர் பறித்துச் சென்ற சம்பவம் நேற்று (13) காலை இடம்பெற்றது.
பண்டாரவளைக்கு செல்வதற்காக பஸ்ஸுக்காக காத்திருந்த போதே, யுவதிகள் சங்கிலியை பறிகொடுத்துள்ளனர்.
இதன்போது சங்கிலியை பறி கொடுத்த யுவதிகள் இருவரும் பதறி நின்ற போது, அவ்வழியாக சென்ற ஹப்புத்தளை பிரதேச தவிசாளர் என்னவென்று வினவியுள்ளார்.
இதனையடுத்து நடந்த சம்பவத்தை யுவதிகள் தெரிவித்ததுடன், உடனடியாக தனது அலைபேசி மூலம் அயலிலுள்ள தோட்டங்களுக்கு தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, திருடர்கள் இருவரையும் மடக்கி பிடித்த பொதுமக்கள், அவர்களை நையப்புடைத்துள்ளதுடன், ஹப்புத்தளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago