2026 மே 07, வியாழக்கிழமை

‘சஜித் தலைமையில் புதிய அரசாங்கம்’

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலில், சஜித் பிரேமதாஸவை பிரதமராக்கி, அவரின் தலைமையில், புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது உறுதியென, நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

எல்ல-பல்லகெட்டுவ பகுதியில், நேற்று (24) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எந்தவித இன ரீதியான வேறுபாடுகளும் இல்லை எனவும் இனவாத சேற்றைப் பூசியே தற்போதைய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

ஆட்சியை கைப்பற்றியவர்கள் வழங்கிய எந்த உறுதிமொழிகளும் இதுவரை நிறைவேற்றப்படாமையால், வாக்களித்த மக்கள் புலம்புகின்றனரென,  அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணி இனவாதம் பேசி மக்களை வஞ்சிக்கும் கட்சி அல்லவெனத் தெரிவித்த  அவர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெறும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன்,  பதுளை மாவட்டத்தில் தமிழ் வாக்குகளை சிதறடிக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் அதற்கு இடமளிக்காது,  பதுளையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .