2026 மே 06, புதன்கிழமை

சஞ்சே மித்ரா கண்டிக்கு வருகிறார்

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சஞ்சே மித்ரா, இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்று (07), இலங்கை வந்தடைந்தார். அவருடன் அறுவர் அடங்கிய தூதுக்குழுவொன்றும் வந்துள்ளது.  

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பாதுகாப்பு படைகளின் பிரதான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, முப்படைகளின் தளபதிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.

அத்துடன், உயர்மட்ட பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபடவுள்ளார் என அறியமுடிகின்றது.  

அவர், கண்டி, அநுராதபுரம் ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார். அவர், கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, நேற்று மாலை 3:45 மணியளவில் வந்தடைந்த இந்திய விமானச் சே​வைக்குச் சொந்தமான ஏ.ஐ.281 என்ற விமானத்திலேயே, அவர் வந்தடைந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .