2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சடுதியாக அதிகரித்த மரக்கறியின் விலை

R.Tharaniya   / 2025 மே 12 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் கடந்த சில மாதங்களாக பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழை என காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக தக்காளி, கோவா, கிழங்கு, கறிமிளகாய், பச்சை மிளகாய், கத்தரிக்காய், போஞ்சி போன்ற காய்கறிகளின் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறைந்தளவு உற்பத்திகளே விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ளதுடன் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இன்றைய சந்தை நிலவரப்படி கத்தரி, கரட், போஞ்சி, பறங்கிக்காய் , கறி மிளகாய், தக்காளி என்பன 1 கிலோகிராம் ரூபாய் 600 தொடக்கம் 650 வரை விற்கப்படுவதுடன் லீக்ஸ் , பீட்ரூட் , பயிற்றங்காய் என்பன 1 கிலோகிராம் ரூபாய் 500 இற்கு விற்கப்படுகின்றன. 

இவ்விலை அதிகரிப்பு இன்னும் ஒருசில மாதங்கள் தொடரலாம் என காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

ஆறுமுகம் புவியரசன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X