2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மதுவால் தோட்டங்களில் சிக்கல்

Editorial   / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுதத் எச்.எம். ஹேவா  

பெரும் தோட்டங்களில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோதமான மதுபான விற்பனையால், தோட்டத்தொழிலாளர்களில் வாழ்வில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், அவர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதிலும் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.  

தோட்டங்களில், மதுபானம் மற்றும் பியர் ஆகியன சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது என்று பெருந்தோட்டங்களைச் சேர்ந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும் தோட்டங்களை அண்மித்திருக்கின்ற மதுபானசாலைகளில் உரிமையாளர்கள் சிலர், முகர்வர்களைக் கொண்டு, தோட்டங்களுக்குள் மதுபானங்களை கூடிய விலைக்கு விற்பனைச் செய்து வருவதாகவும், சட்டவி​ரோதமான இந்த மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது என்றும் பெண்கள் குற்றஞ்சாட்டினர்.

இன்னும் சிலர் கடன் அடிப்படையில், பெருந்தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மதுபானங்களை விற்பனைச் செய்கின்றனர். இதனால், தங்களுடைய கணவன்மார், வாங்கும் சம்பளத்தில் அரைவாசிக்கு மேல், மதுபானத்துக்கான கடனை செலுத்த வேண்டியுள்ளது என்றும் இதனால் குடும்பச் சுமையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

தோட்டங்களில் இவ்வாறான சட்டவிரோதமான மதுபான விற்பனை அதிகரித்துள்ளமையால், இளைஞர்கள் சிலரும் மதுபானத்து அடிமையாகிவிடுகின்றனர் என்றும் அங்குள்ள யுவதிகளிடம் அநாவசியமான சேஷ்டைகளை செய்வதாகவும், இதனால் பெண்களும், யுவதிகளும் கடும் சிரமங்களுக்கு முகங் கொடுப்பதாகவும் அந்தப் பெண்கள் தெரிவித்தனர்.

பெருந்தோட்டங்களில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனைச் செய்வது ஒரு காலத்தில் குறைந்திருந்தது. என்றால், தற்போது சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளமையால், பல்வேறான முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. அத்துடன் வாழ்க்கை​யையும் சீரழிக்கின்றனர் என்றும் அப்பெண்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X