R.Maheshwary / 2022 நவம்பர் 15 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
பொகவந்தலாவை- மஹாஎலிய வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19 பேர் மஸ்கெலியா பொலிஸ் விசேட படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று (15) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொகவந்தலாவை, நோர்வூட், பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை பொகவந்தலாவை பொலிஸாரிடம் ஒப்படைக்காமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக ஹட்டன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17 minute ago
40 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
40 minute ago
47 minute ago