2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைதாகினர்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்

பொகவந்தலாவை- மாவெளி வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல்அகழ்வில் ஈடுபட்டு வந்த, ஜந்து சந்தேகநபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (15) பகல் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன்,  மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்கள் இராணிகாடு மற்றும் ஆல்டி தோட்ட பகுதிகளைச்  சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X