2026 மே 01, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: முறைப்பாடு செய்தார் முகாமையாளர்

எஸ்.சதிஸ்   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மடுல்சீமை தேயிலைப் பெருந்தோட்ட   நிறுவனத்துக்குச் சொந்தமான, பொகவந்தலாவ தெரேசியா தோட்டபகுதியிலுள்ள தேயிலைக் காணியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாக, தெரேசியா தோட்ட முகாமையாளர் சுகத் ஆரியரத்ன, பொகவந்தலாவ பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  

குறித்த பகுதியில், மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட நீர் இறைக்கும் இரண்டு இயந்திரங்களை, தோட்ட முகாமையாளர் மீட்ட பின்னரே, இம்முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இதற்கு முன்னர், சட்டவிரோதமான முறையில், மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்களை, பொகவந்தலாவ பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் கைது செய்திருந்தனர்.  

இந்த மாணிக்கக்கல் அகழ்வுப் பணிகள் காரணமாக, பொகவந்தலாவ கேசல்கமுவ ஓயாவின் நீர் மசடைந்து காணப்படுவதாகவும் காசல்ரீ நீர்த் தேக்கத்தில் மணல் குவிந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

மலையகத்தில், தற்போது நிலவிவரும் கடுமையான வரட்சி காரணமாக, இவ்வாறு மாணிக்கக்கல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையால், மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .