Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதிஸ்
காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள கெசல்கமுவ ஓயா ஆற்றில், ஒருவகையான தாவரத்தைப் பயன்படுத்தி, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டில், நேற்று (10) கைது செய்யப்பட்ட 14 பேரும், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை, 14ஆம் திகதியன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், நோர்வூட் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
வரட்சியான வானிலை காரணமாக, ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி, வென்ஜர் தோட்டத்தைச் சேர்ந்த சிலர், ‘அவரி’ எனப்படும் தாவரம், சுண்ணாம்பு, பெட்டரி உள்ளிட்ட பொருள்களை நீரில் கலந்து, மீன்களை மயக்கமடையச் செய்து, மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த பகுதிக்கு, நோர்வூட் பொலிஸார் சென்றபோது, ஒருவர் சிக்கிக்கொண்டதுடன் ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, ஏனைய சந்தேகநபர்களையும், நேற்று (10) காலை கைதுசெய்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவர்களைப் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago