2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியதில்,
லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்து, தியத்தலாவை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹப்புத்தளை- வல்கவெல பகுதியிலேயே நேற்று (5) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான லொறியிலிருந்து 16 கால்நடைகளும் வெள்ளவாயவிலிருந்து
நுவரெலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட போதே, விபத்துக்குள்ளாகியுள்ளது.



இதனையடுத்து லொறியிருந்த 9 பசுக்களும் 7 எருமை மாடுகளும் ஹப்புத்தளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X