Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 18 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி வேட்பாளராக போட்டியிடும் சதானந்தன் திருமுருகன், தனது தேர்தல் பிரசார நடவடிக்கையை, வியாழக்கிழமை (17) ஆரம்பித்தார்.
கெட்டபுலா - குயின்ஸ்பேரி தோட்டத்தில் அமைந்துள்ள நமநாதர் சித்தர் கோவிலில் இடம்பெற்ற விசேட பூஜையில் கலந்து கொண்ட அவர், அங்கு மக்கள் மத்தியில் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தேர்தல் பிரசார நடவடிக்கையை ஆரம்பித்தார்.
இதன்போது, நமநாதர் சித்தரின் ஜீவ சமாதி,சிவ தரிசனம் மற்றும் முருகப் பெருமானுக்கு பூசைகள் நடத்தப்பட்டன. இப்பூஜை வழிப்பாட்டில் கலந்துகொண்ட அவருக்கு, கோவில் நிர்வாக சபையினர் மற்றும் குயின்ஸ்பேரி தோட்ட மக்களினால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவம் அளிக்கப்பட்டு, வெற்றி ஆசி வழங்கப்பட்டது.
இதையடுத்து, மக்கள் மத்தியில் முதலாவது தேர்தல் பிரச்சார உரையை ஆற்றிய அவர்,
“நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட நாட்டில் ஏழு மாவட்டங்களில் வாழும் மலையக மக்கள் வாழ்வியல் மாற்றத்துக்கு கல்வியே சக்தியாக அமையும். எனவே, கல்வி அபிவிருத்திக்கு நான் அயராது உழைக்க தயாராக உள்ளேன்” என்றார்.
“அத்துடன், கல்வி கற்கும் மலையக பெருந்தோட்ட மாணவர்களின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பட்டத்தாரியை உருவாக்கும் இலக்கை கொண்டுள்ள அதேவேளை, எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல அரசியல் அதிகாரம் எனக்கு தேவைப்படுகிறது. அந்த அதிகாரத்தை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள குயின்ஸ்பேரி தோட்ட மக்கள் உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட மக்கள் தந்துதவ வேண்டும்” எனவும் தெரிவித்தார். (AN)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
4 hours ago