ஆ.ரமேஸ் / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட டயகம, சந்திரிகாமம் - மேகமலைத் தோட்டத்தில், 12 குடியிருப்புகளைக் கொண்ட லயன் தொகுதியொன்றின் நிலம் தாழிறங்கியுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு தாழிறங்கியுள்ள பகுதிகளில் வசித்து வந்த 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தற்போது வேறு இடங்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீடுகளைப் பார்வையிட்ட அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் எஸ். கதிர்செல்வன் கருத்துத் தெரிவிக்கையில்,
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட லயன் வீடுகளே, தற்போது தாழிறங்கியுள்ளன என்றும் இந்நிலையில், சுமார் 14 வீடுகளில், இவ்வாறு வெடிப்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், நிலம் தாழிறங்கியுள்ள பகுதியை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, தற்போது இந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள குடும்பங்களுக்கான புதிய வீடுகளை அமைத்துக்கொள்வதற்கான பாதுகாப்பான இடமொன்றை, தோட்ட நிர்வாகத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago