Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 07 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் 6 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்ற சம்பவம் நமுனுகுல பகுதியில் பதிவாகியுள்ளது.
நமுனுகுல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு நபர் ஒருவரைக் கைதுசெய்ய நடந்து சென்றனர் என பதுளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்ல தெரிவித்துள்ளார்.
பதுளை பொது வைத்தியசாலையில் குழந்தையொன்றை பிரசவித்த கொட்டுகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது குழந்தை மற்றும் கணவருடன் ஓட்டோ ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த போது, லொறியொன்று வீதியின் நடுவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் இதன்போது, குறித்த லொறியின் சாரதிக்கும் ஓட்டோவில் பயணித்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து லொறியில் இருந்த ஒருவர், ஓட்டோவில் இருந்த கணவனையும் மனைவியையும் தாக்கிவிட்டு, பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ய செல்ல பொலிஸாரின் வாகனத்தில் எரிபொருள் இருக்கவில்லை என்றும் இதனால் 6 கிலோமீற்றர் நடந்து சென்று பொலிஸார் சந்தேகநபரை தேடியுள்ளதாகவும் பதுளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்ல தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .