2026 மே 09, சனிக்கிழமை

dd

சப்ரகமுவ பல்கலை ஒன்று கூடலுக்குச் சென்ற வெளிவாரி மாணவன் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வருடாந்த மாணவர் ஒன்று கூடலில் கலந்து கொண்ட, குறித்த பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தின் 2ஆம், 3ஆம் ஆண்டு மாணவர்களால் நடத்தப்பட்ட வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வில், குறித்த ​வெளிவாரி மாணவன் கலந்துகொண்டமை தொடர்பாக, பல்கலைக்கழக மாணவர்களால், பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக உள்வாரி மாணவர் நிகழ்வில், வெளிவாரி மாணவர்கள் கலந்துகொள்ள முடியாது என்றும் குறித்த மாணவன், தன்னிச்சையாக இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் என்றும் மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவன், பலாங்கொடை, புவக்கஹவெல பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .