Freelancer / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
இரத்தினபுரி தோட்ட மாணவர்களின் நலன்கருத்தியும், இடைவிலகலை தவிர்க்கும் நோக்குடனும், மாணவர்களுக்கு இலவசமாக பகலுணவு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி திருமதி குமாரி கொத்தலாவல கூறினார்.
சப்ரகமுவ மாகாண கல்வித்திணைக்களத்தின் வேண்டுக்கோளுக்கமைய இலங்கை செஞ்சிலுவை சங்கம் பிரித்தானியா செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்புடன் இத்தோட்ட மாணவர்களுக்கு இலவசமாக பகலுணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இரத்தினபுரி மாவட்ட தோட்டமக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தோட்டப் பகுதி மாணவர்கள் தமது கல்வியை இடை நடுவில் கைவிடும் அபாய நிலை காணப்படுகின்றது.
தெரிவு செய்யப்பட்ட 10 தோட்ட மற்றும் தோட்ட மாணவர்கள் கூடுதலாக கல்விக்கற்கும் நகர பாடசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கி சுமார் 1,300 பேருக்கு முதற்கட்டமாக இலவசமாக பகலுணவு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்
23 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் வாரத்தில் இரு நாட்கள் பகலுணவு வழங்கப்படும் . இதற்கென நாள் ஒன்றுக்கு மட்டும் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த இலவச உணவு வழங்கப்படும் என்றார்.
14 minute ago
32 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
5 hours ago