Kogilavani / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய நாடாளுமன்றத்துக்கு, மூன்று தசாப்த காலங்களுக்குப் பின்னர், எதிர்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையானது, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குப் புதுத்தெம்மை கொடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமைக்குத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாகவும் மலையகத் தமிழ் மக்கள் சார்பாகவும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்றும் அவர் கூறினார்.
'இலங்கையின் அரசியல் வரலாற்றில், இரண்டாவது முறையாகவும் தமிழர் ஒருவர் எதிர்கட்சி தலைவராக வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள சாதகமான அரசியல் செயற்பாடுகள், இலங்கை வாழ் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவனவாக அமைந்துள்ளன' என்றார். எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களின் நல்வாழ்வுக்காகவும் தமது இந்த உயரிய பதவியைப் பயன்படுத்திக் கொள்வாரென தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago