Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பெருந்தோட்ட மக்களது சம்பள உயர்வை பெற்றுகொடுக்க அரசியல் பலம் தேவையில்லை. தொழிற்சங்க பலமும் பேரம்பேசும் சக்தியுமே தேவை. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இதனையே கையாண்டு சாதனை படைத்தார்' என சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'1970 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் எவ்வித அரசில் பலமோ அந்தஸ்தோ இன்றி பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களை நடத்தினார். இக்காலக் கட்டத்தில்தான் அவரது வேவண்டன் தோட்ட சொத்துக்களும் உடைமைகளும் அரசுடைமை என்ற பெயரில் பறிக்கப்பட்டது.
இருந்தபோதும் துன்ப துயரங்களை தனதாக்கிக் கொண்டு துணிவுடன் செயற்பட்டார். 1970முதல் 1977 வரையிலான காலங்களில் பெருந்தோட்ட மக்கள் பஞ்சம், பசி, பட்டினி, வறுமைகளுக்கு முகம்கொடுத்து சொல்லொன்னா கொடுமைகளை அனுபவித்த நேரத்திலும் முழு மலையகமும் ஸ்தம்பிதமாகும் வகையில் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினார்.
அனைத்து தொழிலாளர்களும் பங்கெடுத்த இப்போராட்டத்துக்கு இலங்கையில் அனைத்து ஊடகங்களும்-சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம, ஆசிய பசுபிக் பிராந்திய அமைப்புகளும் கை கொடுக்க முன் வந்தன.
வெற்றி அல்லது வீர மரணம் என்ற தொனியை தனதாக்கிகொண்ட போஸ்டர்கள் முழு மலையகத்திழும் தலை நகர் கொழும்பிலும் ஒட்டப்பட்டன.
அமைச்சர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அவர் நடத்திய பிரார்த்தனை, தொழிற்சங்க போராட்டமே பெருந்தோட்ட மக்களது பிராஜா உரிமைக்கும் சம்பள உயர்வு-சமசம்பளத்துக்கும் வித்திட்டது.
தோட்டங்களை நடத்துவற்கு திரைசேரி ஊடாக பல கோடி ரூபாய்களை சிலவழிக்க முடியாது என்பதால்தான் 22 தனியார் கம்பனிகளுக்கு தோட்டங்கள் கையளிக்கப்பட்டன.
தோட்டங்களை ஆதாயம் தரக்கூடிய வகையில் நிர்வகித்துக்கொள்ள தோட்ட கம்பணிகள் வழிசமைத்துக்கொள்ள வேண்டும் என்பற்காகவே இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகின்றன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago