Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாமிவேல் சுதர்ஷினி
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை ஏழாம் கட்டமாக இன்று புதன்கிழமை(21) தொழில் அமைச்சில் நடைபெறவிருந்த நிலையில், திகதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தை, மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், சம்பள உயர்வு தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 24ஆம் திகதியும் இரண்டாவது பேச்சுவார்த்தை மே 18ஆம் திகதியும், மூன்றாவது பேச்சுவார்த்தை ஜூன் 22ஆம் திகதியும், நான்காம்கட்டப் பேச்சுவார்த்தை ஜூலை 2ஆம் திகதியும் 5ஆம் கட்டப் பேச்சுவார்த்தை ஜூலை 15ஆம்; திகதியும் ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை செப்டெம்பர் 30ஆம் திகதியும் நடைபெற்றது.
ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தையும் எவ்வித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிவடைந்த நிலையில் திகதி குறிப்பிடப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையிலே நேற்றைய தினம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
9 hours ago