Sudharshini / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொரிஸ் என்டனி
உரிய நேரத்தில் சம்பளத்தை வழங்குமாறு கோரி நிவித்திகலை நொரகல்ல தோட்டத் தொழிலாளர்கள் இன்று (11), தோட்ட காரியாலத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகலவத்தை பெருந்தோட்ட கம்பனியினரால் நிர்வகிக்கப்படும் இத்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று(11) வரை சம்பளம் வழங்கப்படவில்லை.
சம்பளம் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட காரியாலயத்துக்கு முன்பு ஒன்றுகூடிய தொழிலாளர்கள் 'எமது சம்பளத்தை எமக்குத் தா', 'எமது ஊழிய சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியை (ஈ.ரி.எப்) வைப்பிலிடு' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விடயம் குறித்து நொரகல்ல தோட்ட அதிகாரி துமிந்த சப்ரகமுவவிடம் வினவியப்போது, எதிர்வரும் திங்கட்கிழமை(12) வேதனம் வழங்குவதற்கான நிதி கிடைக்கும் எனக் கூறியதுடன் நிர்வாகம் தொடர்பான சில கேள்விகளுக்கு பதில் வழங்குவதை தவிர்த்துக் கொண்டார்.
இதற்கான பதில்களை தோட்ட கம்பனியினர் மற்றும் பிரதித் தொழில் ஆணையாளரிடமே கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
.jpg)
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago