2026 மே 01, வெள்ளிக்கிழமை

சமன் தேவாலய பெரஹெராவுக்கும் மதுபானசாலைகள் மூடப்படும்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொரிஸ் என்டனி

சப்ரகமுவ சமன் தேவாலய பெரஹெரா காலப்பகுதியில், இரத்தினபுரி நகரை அண்மித்த பிரதேசங்களிலுள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கரவின் தலைமையில்  இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலே   இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

பெரஹெரா காலப்பகுதியில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் இரத்தினபுரி, எலபாத்த, மல்வல மற்றும் மாரப்பன ஆகிய இடங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சமன் தேவாலய பெரஹெரா எதிர்வரும் 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .