Editorial / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதில் மக்கள் பிரதிநிதிகள் அக்கறை காட்டவேண்டுமே தவிர, அதனை இல்லாதொழிப்பதற்கு முயற்சிக்கக்கூடாதென, தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச செயலாளரும் கெர்கஸ்வோல்ட் கீழ் வட்டார அமைப்பாளருமான சுப்பையா கமலதாசன் தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில், கெர்கஸ்வோல்ட் கீழ் வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர் சரோஜா, லெட்சுமி கீழ் வட்டாரத்தில் சமுர்த்தி பயனாளிகள், பக்கச்சார்பாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்வைத்த பிரேரணை தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “2018ஆம் ஆண்டு, நுவரெலியா மாவட்டத்தில் 39 ஆயிரத்து 775 பேருக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. 1 இலட்சத்து 12 ஆயிரத்து 364 பேர் வாழும் வலப்பனை பிரதேசத்தில், 11 ஆயிரத்து 671 பயனாளிகளுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“95 ஆயிரத்து 539 பேரைக்கொண்ட ஹங்குராங்கெத்த பிரதேசத்தில், 8 ஆயிரத்து 832 பயனாளிகளும் 1 இலட்சத்து 9 ஆயிரத்து 364 மக்கள் சனத்தொகை கொண்ட கொத்மலை பிரதேசத்தில், 8 ஆயிரத்து 605 பயனாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
“ஆனால், 2 இலட்சத்து 28 ஆயிரத்து 890 மக்கள் சனத்தொகையைக் கொண்ட நுவரெலியா மாவட்டத்தில், வெறும் 5 ஆயிரத்து 513 பயனாளிகளும் 2 இலட்சத்து 22 ஆயிரத்து 14 மக்கள் சனத்தொகை கொண்ட அம்பகமுவை பிரதேசத்தில், வெறும் 5 ஆயிரத்து 154 பயனாளிகளுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனைப் பார்க்கும்போது, வலப்பனை பிரதேசத்தில் 9 பேருக்கு ஒருவர் என்ற வீதத்திலும் ஹங்குராங்கெத்த,, கொத்மலை பிரதேசத்தில் 11 பேருக்கு ஒருவர் என்ற வீதத்திலும் தெரிவு செய்யப்படுகின்ற நிலையில், 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட அம்பகமுவ, நுவரெலியா பிரதேசத்தில், 40 பேருக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுகின்றனர்.
இந்த நிலைமையே, 2018ஆம் ஆண்டு வரை காணப்பட்டது. 2019ஆம் ஆண்டில் இந்த நிலைமை மாற்றம் கண்டுள்ளது என, அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையிலேயே மிகபெரிய கிராம சேவக பிரிவாகும். கெர்கஸ்வோல்ட் கிராம சேவர் பிரிவு. இதுவரை ஏறத்தாழ 12 ஆயிரம் மக்கள் வாழும் பிரதேசத்தில், வெறும் 50 பயனாளிகளே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
“இன்று அதனை மாற்றி, 271ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவும் போதுமானதில்லை. எதிர்வரும் காலங்களில், இந்த பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டுமே தவிர, கிடைத்ததை இல்லாதொழிக்க முயற்சிக்கக் கூடாது.
“சபையில் வெற்றுப் பிரேரணை கொண்டும்வரும் நேரத்துக்கு, சில பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த வங்கிகளை அதிகரிக்கும் பிரேரணைகளை கொண்டுவந்து ஆக்கப்பூர்வமாகச் செயற்படவும் முடியும்” எனவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago