2026 மே 06, புதன்கிழமை

சமுர்த்தி பெறுவோருக்கு முதற்கட்டமாக ரூ.5,000

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணத்திலக்க

மொனராகலை மாவட்டத்தில் சமுர்த்தி பயன்பெறும் 57,725 குடும்பங்களுக்கு, தலா 5,000 ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மொனராகலை மாவட்டச் செயலாளர் குணதாஸ சமரசிங்க தெரிவித்தார்.

கொவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சாட்டத்தால், வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மக்களின் நலன்கருதி, சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்களுக்கு, தலா 10,000  என்றடிப்படையில் வட்டி இல்லா கடனை வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, முதற் கட்டமாக 5,000 ரூபாயை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, மொனராகலை மாவட்டச் செயலாளர் குணதாஸ சமரசிங்க தெரிவித்தார். 

சமுர்த்திப் பயனாளர்களுக்கு, முதல் கட்டமாக 5,000 ரூபாயை வழங்குவதற்கு, அரசாங்கத்தால் 21 கோடி 820 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மொனராகலை மாவட்டத்தில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1,135 பேருக்கும் காத்திருப்புப் பட்டியலிலுள்ள 584 பேருக்கும் வலதுகுறைந்தோருக்கான உதவியைப் பெற்றுவரும் 2,219 பேருக்கும் அவர்களில் காத்திருப்புப் பட்டியலிலுள்ள 1,230 பேருக்கும், வயோதிபர் கொடுப்பனவைப் பெறும் 11,230 பேருக்கும், தலா 5,000 ரூபாயை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 2,000 ரூபாய் பெறுமதியான போசணை உணவு அடங்கிய பொதிகளை விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .