Editorial / 2020 மார்ச் 13 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையகத்தில் கல்விப்புரட்சி மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காகவும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கிலுமே, தேசிய மலையக முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ளது என்று, முன்னணியின் பொதுச்செயலாளரும், நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினருமான பெருமாள் அற்புதராஜா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள தேசிய மலையக முன்னணி, முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணனை (13.03.2020) அன்று சந்தித்து தமது முடிவை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பெருமாள் அற்புதராஜா மேலும் கூறுகையில், பொதுத்தேர்தல் தொடர்பில், தமது நிர்வாகக்குழு கூடி ஆராய்ந்ததாகவும் மலையக சமூகத்தின் எதிர்காலம், வாழ்வாதாரம், பொருளாதாரம், கல்வி போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனஞ் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடந்தகாலச் செயற்பாடுகளும் ஆராயப்பட்டன என்றும் நாடாளுமன்றத்துக்கான வருகை, மலையகம் சார்ந்த பகுதிகளுக்கான சமூகம்சார்ந்த சேவைகள் போன்றவற்றை, தமிழ் முற்போக்குக் கூட்டணி சிறப்பாக செய்துள்ளதுதாகவும் தெரிவித்தார்.
எனவேதான் தமது சமூகத்தின் எதிர்காலத்தை சுபீட்சமாக மாற்றுவதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago