Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜனவரி 26 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், எஸ்.சதீஸ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வைக் வழங்கக் கோரி, டிக்கோயா - சலங்கந்தை பகுதியை சேர்ந்த சிவனு கணேசன் என்பவர், அட்டன் - மல்லியப்பு சந்தியில், இன்று சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பாராமுகமாக செயற்படாமல் உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், கொழும்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துமே, குறித்த நபர் மேற்படி சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அண்மைக்காலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைக் கோரி பல்வேறு வகையான போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், மலையகத்தில் அட்டனில் சிவனு கணேசன் என்பவர் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago