Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 07 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில், நிதி அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் எனவே, இவ்வாரத்துக்குள், நிதி அமைச்சிலிருந்து சாதகமான பதில் வருமென்று, தான் நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில், நேற்று(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் மேலும் கூறுகையில், தனக்கு எதிராக முகநூலில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரசியல்வாதி ஒருவரின் பணிப்புரையின் பேரில், ஹட்டனை மையமாகக்கொண்டு இயங்கிவரும் சிலரே, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனரென்றும் குற்றஞ்சாட்டினார்.
அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்போவதாகவும், இந்தப் போலியான பிரச்சாரங்களுக்குப் பின்னால் பல ஆசிரியர்கள், மலையகத்தின் புத்திஜீவிகள் உள்ளிட்ட 42 பேர் இதுவரையில் இணங்கானப்பட்டுள்ளனர் என்றும் அவர் கணக்கிட்டு கூறினார்.
இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்திருந்தபோதிலும் 1977 ஆம் ஆண்டே மலையகத்திற்கு சுதந்திரம் கிடைத்ததாகவும், மலையக வரலாற்றில் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததில்லை எனவும், அம்மாவட்டத்திலிருந்து அமைச்சராகியிருப்பது தான் ஒருவரே எனவும் தெரிவித்தார்.
தனக்கு வழங்கப்படும் நாடாளுமன்றக் கொடுப்பனவுகளை தான் ஒருபோதும் பெற்றுக்கொண்டதில்லை எனவும், யார் நாட்டை ஆட்சி செய்கிறார்கள் என்ற கவலைப்படுவதைவிடுத்து சிறுபான்மை மக்களான மலையக மக்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதே தனது இலக்கு எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால், வெறும் கோரிக்கைகளை மாத்திரமே முன்வைக்க முடியும் என்றும் ஆனால் அமைச்சர் என்கிற அதிகாரம் இருந்தால், மலையக மக்களுக்கு சேவைச் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் சம்பள அதிகரிப்பை கருத்திற்கொண்டு, கம்பனிகளுக்கு இதுவரையில் வழங்கி வந்திருந்த மானியங்களை இரட்டிப்பாக்கவும் தான் தீர்மானத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago