R.Maheshwary / 2021 நவம்பர் 15 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
அரச பெருந்தோட்ட யாக்கத்துக்கு சொந்தமான மொனராகலை- குமாரவத்த தோட்டத் தொழிலாளர்கள், இன்று (15) தமது மாதாந்த சம்பளத்தைக் கோரி, ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
மொனராகலை- வெல்லவாய வீதியின் வெல்லச்சிகடை முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கறுப்பு கொடியை எந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இந்த மக்கள். ஒக்டோபர் மாத்த்துக்கான தமது சம்பளத்தை முழமையாக வழங்க வேண்டும் என கோரிக்கையையும் முன்வைத்தனர்.
அத்துடன் தமது சம்பளத்தை முழுமையாக வழங்கும் வரை, பணிகளுக்கு செல்லப் போவதில்லை என்றும் தெரிவித்தும் சுமார் 1 மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். கோவிந்தராஜ், இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும், குமாரவத்த தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கும் வரை தொடர்ச்சியாக இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago