2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

‘சம்பளத்தை வழங்கும் கோரிக்கையை அரசாங்க ஊழியர்கள் நிராகரிக்கவும்’

Editorial   / 2020 மே 10 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

புவியரசன்

கொவிட்-19 நிவாரண நிதிக்காக, அரசாங்க ஊழியர்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை, அரசாங்க ஊழியர்கள் நிராகரிக்கவேண்டும் என, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று (09) அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர்,

இது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பீ. ஜெயசுந்தரவின் தனிப்பட்ட வேண்டுகோள் அல்ல என்றும் இது, அரசாங்கத்தால் உத்தியோகப்பூர்வமாக விடுக்கப்பட்ட வேண்டுகோள் என, அவர் கூறினார்.

அதனால்தான், ஜனாதிபதி  செயலகத்தின் கடிதத் தலையை பயன்படுத்தி இந்தக் கோரிக்கையை, சகல அரசாங்க நிறுவனங்களுக்கும் திணைக்களங்களுக்கும் அனுப்பியுள்ளதாக கூறிய அவர், இதனால், அரசாங்க ஊழியர்களுக்கு, ஜனாதிபதியின் செயலாளரை ஒரு காரணமாக காட்டி, மறைமுகமாக அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.

இதனால், அரசாங்க ஊழியர்கள் தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்தக் கோரிக்கையை நிராகரிக்க முடியாமல், அரசாங்கத்தின் ஆதரவு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முன்வரும்போது, மற்றையவர்களும் வழங்கவேண்டிய நிலை வரும் என்றும் இதன் காரணமாக, அரசாங்க ஊழியர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கவனத்தில் எடுக்காது, அதிகாரத்த நிலைநிறுத்திக்கொள்வதற்காக, தேவையற்ற தேர்தல் ஒன்றுக்கு தயாராக வரும் அரசாங்கம், அதன் தேர்தல் செலவுகளை ஈடுகட்டுவதற்காக, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை எடுத்துக்கொள்ளப் பார்க்கின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .