Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
உடப்புஸ்ஸல்லாவை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு, சம்பளம் வழங்குவதற்கு தாமதிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியாது நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.
தமக்கான சம்பளத்தை, 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு, மேற்படி கம்பனிக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகங்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், வழமைபோன்று 10 ஆம் திகதியான நேற்றே(10) சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம், 14ஆம் திகதியே தளர்த்தப்படும் என்பதால், நான்கு தினங்களுக்கு, பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
நேற்றைய தினம், சம்பளம் வழங்கப்பட்டிருக்குமாயின், நான்கு நாள்களுக்குத் தேவையான பொருள்களைக் கொள்வனவு செய்திருக்க முடியும் என்று, தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, நான்கு தினங்களுக்குத் தேவையான பொருள்களை நிவாரணமாகவேனும் வழங்குவதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என்று, மேற்படி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மனிதாபிமானமற்ற முறையில், உடபுஸ்ஸல்லாவை பெருந்தோட்ட நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago