2026 மே 09, சனிக்கிழமை

’சம்பளப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன்’

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ். சதீஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் தலையிடுவதற்கு தனக்கு முழு அதிகாரம் உள்ளதெனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, அமைச்சர் சஜித் பிரேமதாஸ போன்ற ஒருவர் ஜனாதிபதியாக இருந்தால், அதற்கு  தானும் உருதுணையாக இருந்து தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

டிக்கோயா தேசிய மக்கள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

இலங்கை நாட்டுக்கு ஒரு சிறந்த தலைவர் இல்லாமையால்,  நாட்டு மக்கள் இன்று அரசியல் வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும்,  எனவே, சஜீத் பிரேமேதாஸ போன்ற ஒருவர், ஜனாதிபதியாக வந்தால் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுகொடுக்க முடியும்  என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் சஜீத் பிரேமேதாஸ தனது அரசியல் செயற்பாடுகளை இரவு 12 மணிக்கு நிறைவு செய்துகொண்டால், மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கு மீண்டும் தமது கடமையை ஆரம்பித்துவிடுவார் என்றும்  அதேபோன்று தான், அவருடைய தந்தையார் ரணசிங்க பிரேமேதாஸவும் செயற்பாட்டார் என்றும் தெரிவித்தார்.

தற்போது இந்த நாடு பொருளாதார ரீதியில் கீழே தள்ளப்பட்டுள்ளது என்றும், எனவே இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் எனில், சஜீத் பிரேதாஸ போன்ற இளம் அரசியல் வாதிகளே ஜனாதிபதியாக வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .