Editorial / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளைஞரும், யுவதியும் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு ஸ்டிதரன் தோட்டப் பகுதியிலேயே ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள், அதிக வேகத்தால் சரென சறுக்கி சென்று, 'காட் கல்லில்' மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. மேலதிக விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago