R.Maheshwary / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் செலவில், அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று சிகிச்சைப் பிரிவின் பணிகள், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தரிந்த வீரசிங்க தலைமையில், சர்வமா வழிபாடுகளுடன் இன்று (27) திகதி காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தொற்றாளர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது.
இதனை சமாளிப்பதற்காக வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அரசார்பற்ற நிறுவனங்கள் ,வர்த்தகர்கள், உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் குறித்த கொரோனா சிகிச்சை பிரிவு கட்டடம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டது.
இந்தப் பிரிவு கடந்த காலங்களில் திறந்து வைக்கப்பட்ட போதிலும், இந்தப் பிரிவுக்கு கொரோனா நோயாளர்கள் மாற்றப்படவில்லை.இந்நிலையில் நேற்றுடன் இப்பிரிவின் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன..
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .