Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 நவம்பர் 01 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.சதிஸ்
சவூதியில் இடம்பெற்ற விபத்தில் மரணமான பொகவந்தலாவையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஜெயக்குமாரின் சடலத்தை, இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, அவரது உறவினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான மேற்படி நபர், குடும்ப வறுமை காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு, கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக, சவூதிக்கு பணியாளராகச் சென்றுள்ளார்.
இரண்டுவருட ஒப்பந்த அடிப்படையில் சென்ற இவர், எதிர்வரும் ஜனவரி மாதம் நாடு திரும்பவிருந்த நிலையிலேயே, சவூதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது பிறந்த தினமான திங்கட்கிழமை (30) காலை 10 மணியளவில், தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும், அந்த அழைப்பில் ஜெயக்குமார் இறந்துவிட்டாரெனத் தகவல் வழங்கப்பட்டதாகவும், அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காரொன்று மோதியதில் அவர், ஸ்தலத்திலேயே பலியானாரென, வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகத்தின் ஊடாக, பொகவந்தலாவை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளத் தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
அவரது சடலத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்றும், அவரது குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025