2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சாமிமலை சம்பவம் ; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை நகரில் கடந்த 30 ஆம் திகதி  மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கொடூரமாக தாக்கிய , சாமிமலை நகர வர்த்தகர்கள் மீது சட்டத்தை அமல்படுத்தக் கோரி திங்கட்கிழமை (04) பிற்பகல் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள்  சாமிமலை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காயமடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட பரமேஸ்வரன் (30) என்ற நபர் சாமிமலையில் உள்ள கவரவில தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தற்போது அவர்  டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

 தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தை நியாயமாக அமல்படுத்துமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

காமினி பண்டார 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .