செ.தி.பெருமாள் / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சாமிமலை மின்னா தோட்டத்துக்குச் செல்லும் சுமார் இரண்டரை கிலோமீற்றர் தூரம் கொண்ட பாதையைச் செப்பனிடுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டும், இதுவரையில் செப்பனிடப்படவில்லை என, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த வீதியைச் செப்பனிடுவதற்கு, பல மாதங்களுக்கு முன்னர் 2.8 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டும் மந்தகதியிலேயே பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பல மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த பணியின் விளைவாக, இதுவரைக்கும் 200 மீற்றர் தூரமே செப்பனிடப்பட்டுள்ளது என்றும் இதற்காக ஒதுக்கப்பட்ட பணம் சூரையாடப்பட்டு விட்டதாக என்றும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
எனவே, இது குறித்து உரிய அமைச்சு கவனத்தில் கொண்டு, பணியை விரைவாக முன்னெடுத்து, பாதையைப் புனரமைத்துத் தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago