R.Maheshwary / 2022 செப்டெம்பர் 04 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
சாமியார் வேடமிட்டு, பெண்கள் தனிமையில் வசித்த வீட்டில் நகை மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேகநபர், பசறை- பரகொல்ல பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவரிடம், முகநூல் வாயிலாக தான் மந்திரவாதி என அடையாளப்படுத்திக் கொண்டு நட்பை ஏற்படுத்தி, அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பின்னர், தான் செய்யும் பூஜை பரிகாரங்களுக்கு, பெண்கள் அணிந்திருந்த நகைகள் தடையாக இருப்பதாகத் தெரிவித்து, நகைகளை கழற்றி வைத்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
பின் தன் கையில் அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தையும் கழற்றி வைத்த அவர், பூஜை செய்வதற்கு மேலும் ஒரு முக்கியமான பொருள் வேண்டும் என்றும், அது பசறை பகுதியில் இல்லை பதுளையிலேயே இருப்பதாகவும் கூறி தான் சென்று வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற நபர் மாலையாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமுற்ற பெண், தான் கழற்றி வைத்த தங்க நகைகளும் கையடக்கத் தொலைபேசியும் குறித்த நபரால் திருடி செல்லப்பட்டுள்ளமையை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில், பசறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பதுளை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல பதுளை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ் குழுவினர் விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த சந்தேக நபர் திருகோணமலையில் விடுதி ஒன்றில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து திருகோணமலையில் வைத்து சந்தேகநபரை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்,31 வயதான ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன் குறித்த நபர் சுமார் ஒன்றரை வருட காலமாக அநுராதபுரம் , கொழும்பு, திருகோணமலை மேலும் பல பகுதிகளில் தனது மனைவியுடன் விடுதிகளிலேயே வாழ்ந்து வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago