2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சாரதி இன்றி ஓடிய ஓட்டோ: நால்வருக்கு காயம்

Editorial   / 2024 ஜூன் 20 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டி ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்து மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பதுளை மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல பிரதேசத்தில் இன்று (20) பிற்பகல் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

மீகஹகிவுல நகரிலிருந்து பொல்கஹராவ கிராமத்தை நோக்கிச் சென்ற இந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஏதோ தேவைக்காக முச்சக்கரவண்டியை கடையொன்றுக்கு அருகில் நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி சென்றுவிட்டார்.

அதேநேரம் முச்சக்கரவண்டி சாரதியின்றி ஐம்பது அடிகள் முன்னால் சென்று,  முன்னால் இருந்த 30 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்கு உள்ளானது.

மெகஹகிவுல நகரில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகள் இருவர் காயமடைந்தவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X