R.Maheshwary / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவை - டியன்சின் நகரில் வைத்து, குடிபோதையிலிருந்த இளைஞர்கள் சிலர், சாரதி ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த 27 வயதுடைய சாரதி, பொகவந்தலாவை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 26ஆம் திகதி தோட்டப் புறங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருள்களை விநியோகித்து வரும் குறித்த சாரதி தனது லொறியில் பயணித்துக்கொண்டிருந்த போது, டியன்சின் நகரில் வைத்து, இளைஞர்கள் சிலர், குடிபோதையில் வீதியின் நடுவே சென்றுள்ளனர்.
இதனால் வாகன ஒலியை எழுப்பிய சாரதி, இளைஞர்களை ஓரமாக நடந்து செல்லுமாறு பணித்துள்ளார்.
எனினும், மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள், சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாரதியையும் தாக்கி, அவரது பையிலிருந்த 70ஆயிரம் ருபாய் பணத்தையும் களவாடி சென்றதாக சாரதி பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொகவந்தலாவை பொலிஸார் சம்பந்தபட்ட இளைஞர்களை நேற்றுமுன்தினம் (28) இரவு கைது செய்துள்ளதுடன், அவர்களை
நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .