2026 மே 09, சனிக்கிழமை

dd

சி.வி வேலுப்பிள்ளைக்கு மடகொம்பரையில் நினைவாலயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி.வி.வேலுப்பிள்ளையின் 105ஆவது பிறந்த தினமும் சி.வி வாழ்ந்த வீட்டை நினைவாலயமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வும், நாளை (14) காலை 9.30 மணிக்கு, மடகொம்பரையில் நடைபெறவுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு அமைச்சர்  பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார் கலந்துகொள்ளவுள்ளதுடன், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, எம்.ராம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்ச்சி ஒழுங்கமைப்புகளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் க.நகுலேஸ்வரன் மேற்கொண்டு வருகிழன்றார். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு,  தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர். எஸ்.பிலிப், தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .