2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிகிச்சை அளித்த வைத்தியர்களுக்கு கொரோனா

Gavitha   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கேகாலை வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் மூன்று பெண் வைத்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக,  வைத்திய அதிகாரி மிஹிரி பிரியங்கிகா, இன்று (12)  தெரிவித்தார்.

வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனைகள் உட்பட கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியர்களுக்கே,  வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் இதுவரை  வைத்தியர்கள் உட்பட ஊழியர்கள் 104 பேருக்கு, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார்.

இதேவேளை வைரஸ் தொற்றுக்குள்ளான வைத்தியரகள் மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X