2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சிகிரியாவில் தேசிய உணவகம்

Kogilavani   / 2017 ஜூலை 12 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

தம்புள்ள,சிகிரியாவில் தேசிய உணவு விற்பனை நிலையமொன்று, நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

தம்புள்ள மற்றும் சிகிரியா பிரதேசங்களுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி, மாகாண விவசாய அமைச்சின் 35 இலட்சம் ரூபாய் செலவிவில், மத்திய மாகாண விவசாய திணைக்களத்தினால், மேற்படி உணவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவு நுகர்வின் ஊடாக, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

உணவகத்தின் திறப்பு விழாவில், விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார, மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .