Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
உரமின்மை மற்றும் வெள்ளை நிற ஈக்களால் பதுளை மாவட்டத்திலுள்ள மலர் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பதுளை, பண்டாரவளை, தியத்தலாவை, எல்ல, ஹப்புதளை, ஹல்துமுல்ல, ஊவா பரணகம, வெலிமட ஆகிய பிரதேசங்களிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் உற்பத்தியாளர்கள் பாரிய அசளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தமது உற்பத்திக்கு தேவையான உரம் இல்லாமல் மலர் உற்பத்தியில் வீழ்ச்சியை
எதிர்நோக்கியுள்ள தமக்கு, தற்போது மலர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை நிற
ஈக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதாலும் மலர் உற்பத்தி பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளதென சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, தமது உற்பத்திக்கு தேவையான உரத்தை வழங்கவும் குறித்த வெள்ளை நிற ஈக்களின்
தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், தமது மலர் உற்பத்தியை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago