Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மஸ்கெலியா- லக்கம்பே கடை வீதிக்கு அருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் சுகயீனமுற்ற ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் இவரது உறவினர்கள் சடலத்தை பொறுப்பேற்குமாறும் மஸ்கெலியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 75 வயது மதிக்கத்தக்க அங்கமுத்து சிங்காரவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
163 மீற்றர் உயரமான இவர், வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது, நீல நிற நீள சட்டையும் நீல நிற சாரமும் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் 1980- 85ஆம் ஆண்டு வரை அவரது மகனுடன் லக்கம்பே பகுதியில் வாழ்ந்து வந்துள்ள நிலையில், இருவரும் பின்னர் அப்பிரதேசத்தை விட்டு சென்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் மனைவி ஒரு ஆசிரியை என்றும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவரது சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே உயிரிழந்தவரின் உறவினர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆரியரத்னவின் கைபேசி இலக்கமான 0718591126 அல்லது 052-2277222 இலக்கத்துக்கோ தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago