Kogilavani / 2021 ஜனவரி 17 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்க வேண்டும் எனும் கோரிக்கை, தனியே தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கான தீர்வு மாத்திரமல்ல என்றும் அது ஐந்தாவது தலைமுறையான இன்றைய மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கையாகும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
எனவே, இதனைப் புரிந்துகொண்டு இன்றைய இளம்; தலைமுறை அதனை உரையாடவும் வென்றெடுக்கவும் முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் ஏற்பாட்டில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜீவன் இராஜேந்திரனின் நெறிப்படுத்தலில், இணையவழி கருத்தாடல் களம், நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான மு.சிவலிங்கம், முன்னாள் எம்.பி மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் உரையாளர்களாகக் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.
இதன்போது தொடர்ந்துரைத்த முன்னாள் எம்.பி திலகராஜ், ஐந்தாம் தலைமுறையினரான இன்றைய தலைமுறையினர், தமது பிரதான கோரிக்கையாக சிறுதோட்ட உடமை எனும் கருத்தியலைத் துணிந்து ஏற்பவர்களாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
துரதிஷ்டவசமாக ஐந்தாம் தலைமுறையினர், இரண்டாம் தலைமுறையினர் நின்ற இடத்தில் நிற்கும் பலவீனத்தையே, பார்க்க முடிவதாகவும் தெரிவித்தார்.
'சிறுதோட்ட உடைமையாளர்' எனும் இலக்கு, தனியே தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கான தீர்வு மாத்திரமல்ல, அது ஐந்தாம் தலைமுறையான இன்றைய மலையகத் தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கையாகும் என்பதைப் புரிந்துகொண்டு இன்றைய இளம் தலைமுறை அதனை உரையாடவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும்' என்றார்.
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago