Janu / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கினிகத்தேனை, கெனில்வர்த் (Kenilworth) தோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கெனில்வர்த் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுகொண்டிருந்த போது, அங்கு சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் இது குறித்து நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதுடன் வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்தது 'ஹந்துன் திவியா' (Fishing Cat) இனத்தை சேர்ந்த சிறுத்தையா அல்லது மலைப்பாங்கான பகுதிகளில் காணப்படும் சிறுத்தையா என்பது குறித்தும், அதன் உயிரிழப்பிற்கான காரணம் குறித்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

12 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago