2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

சிறுத்தைகள் அட்டகாசம்: 13 நாய்கள் பலி

Editorial   / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

ஹட்டன் - வனராஜா, சமர்வில் தோட்டத்தின் மேல் பிரிவில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி இரவு, குறித்த தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையொன்று, வளர்ப்பு நாய் ஒன்றைக் கௌவ்விச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.

சமீபகாலமாக இப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இதுவரை சுமார் 13-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் சிறுத்தையினால் வேட்டையாடப்பட்டுள்ளதாகத் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

  தோட்டப் பகுதிகளில் வீதி மின்விளக்குகள் முறையாக இயங்காத காரணத்தினால், இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே அவதானிக்க முடிவதில்லை என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, மாலை நேரங்களில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இந்த அபாயகரமான நிலைமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்தி, சிறுத்தைகளை விரட்டுவதற்கோ அல்லது அவற்றைப் பிடிப்பதற்கோ உரிய நடவடிக்கை எடுத்துத் தர வேண்டும் எனத் தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .