Freelancer / 2023 மார்ச் 01 , பி.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி

புளத்கொஹூபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இஹல உடுவ பிரதேசத்தில் தேயிலைத் தோட்டத்தில் கம்பி சுருக்கில் சிக்கி, சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.
5 வயதான அந்த சிறுத்தை நேற்று (01) அதிகாலை வேளையில் உயிரிழந்துள்ளது. என புளத்கொஹூபிட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தை மரணமடைந்தமை தொடர்பில், கேகாலை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
மிருக வைத்தியரைக் கொண்டு சிறுத்தையின் உடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கையிடுமாறு உத்தரவிட்ட நீதவான், சம்பவத்துடன் தொடர்புடையவர் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்குமாறு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
3 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Mar 2026